Nifty - 02-03-2012 HOURLY




மீண்டும் ஓர் முறை CHANNEL உருவாகியுள்ளதை படத்தில் காணலாம். மேல் நிலையில் 5480 மற்றும் கீழ் நிலையில் 5343 நிலைகளும் இதன் தடுப்பு சுவர்கள் ஆகும்.

5559 - 5480 - 5447 - 5426 - 5349 - 5285 - 5066

குறிப்பு:

NIFTY என குறிப்பிடப்படும் அனைத்தும் NIFTY FUTURES நிலைகள் ஆகும்.


NIFTY 24-02-2012 - EOD

கிட்டதட்ட எதிர்பார்த்த நிலைகளிலே தான் சந்தையின் பலவீனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
5550-5650 நிலைகளும் கனகச்சிதமாக மேல் நோக்கிய பயணத்தை தடுத்துள்ளது.


இனி வரும் நாட்களில், கரடிகளின் ஆடுகளமாக உருவாக வாய்ப்புகள் அதிகம் !!
HOURLY சார்டினில் 5500 நிலைகளும், EOD சார்டினில் 5700 நிலைகளும் , மிகவும் பலமாக தடுக்கும் வலிமை உள்ள நிலைகள் .


இந்த 5500 நிலைகள் தடுக்கு பட்சத்தில், 5196 நிலைகளை தொடுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளும்.
அவ்வாறு நடக்குமேயானால், மாதந்திர சார்டினில் நாம் சில பதிவிற்கு முன் கண்ட டிரெண்ட் லைன், மீண்டும் உயிர் பெற்றுவிடும்.

மேலும், அடுத்த சில வாரங்களுக்கு 5500 முதல் 5196 நிலைகளுக்குள்ளே ஊசலாடும் வாய்ப்புகளையே காண்கிறேன்.
 

5640 - 5551 - 5500 - 5416 - 5349 - 5285 - 5196

SILVER - 22-02-2012

வெள்ளியின் தடுப்பு நிலையாக 57200னும் , தாங்கு நிலையாக 56300 நிலைகளும் உள்ளன.
56000 நிலைகள் உடைபடாத வரையிலும், மேல் நோக்கிய பயணதிற்கே சாத்தியங்கள் மிகுதி.




56100 - 56400 - 57200 - 58200 - 59800

(நூறாவது பதிவு) NIFTY - 18-02-2012

வெள்ளிகிழமை அன்றே 5660 வரையிலும் சந்தையின் வேகம் இருக்கும் என எதிர்ப்பார்த்தேன், பிற்பாதியில் நடந்த PROFIT BOOKING சில புள்ளிகளை நழுவ விட்டாலும், இன்னமும் காளைகளின் கைப்பிடியில் தான் உள்ளது.
அடுத்த வாரத்தில், 5580 நிலைகளை எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே திசையினை தீர்மானிக்க இயலும்.


5580 நிலைகள் தாங்கும் பட்சத்தில் 5640 - 5660 நிலைகள் வரை இன்னொரு முறை RALLY நடக்கும் வாய்ப்பும், 5570 நிலைகளுக்கு கீழ் காளைகள் வலுவிழக்கும் வாய்ப்பும் உள்ளன.

5530 - 5570 - 5580 - 5613 - 5643 - 5660

NIFTY - 17-02-2012

நேற்றைய தினம் முற்பாதியில் நடந்த வீழ்ச்சி.. கிட்டதட்ட மிக முக்கியமான தாங்கு நிலையில் தான் நின்றுள்ளது .. படத்தில் உள்ளது நிப்டியின் HOURLY சார்ட். சில நாட்களாகவே இருந்து வந்த CHANNEL, வெற்றிக்கரமாக உடைபட்டு.. நேற்று அந்த CHANNELன் BREAKOUT லைனில் முடிவடைந்துள்ளது.


இதன் தாக்கம் 5620 - 5660 வரையில் சந்தையினை இழுத்து செல்ல கூடும்.

இருப்பினும், சிறிய வர்த்தகர்கள் .. 5620 நிலைகளுக்கு மேல் மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்.

மேலும்.. 5530 நிலைகளுக்கு கீழ் HOURLY CANDLE CLOSE ஆகும் பட்சத்தில், விலகி இருந்து வேடிக்கை பார்ப்பதே மேல்.

5422 - 5448 - 5471 - 5507 - 5530 - 5572 - 5639 - 5659